சென்னை: தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் அடுத்து மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:- ஓராண்டு காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள 57,000 அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு, அரசு மற்றும் முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்புகள், பொதுமக்களின் உதவியோடு, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பழைய முறையைப் பின்பற்றி 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.